ஈரானுக்கு எதிரான போரில் சட்ட அடிப்படை எதுவுமின்றி இணைய முடியாது: டிரம்ப்புக்கு இங்கிலாந்து பிரதமர் பதில்

அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காக டிரோன்களையும், ஏவுகணைகளையும் இங்கிலாந்து போர் விமானங்கள் தாக்கி அழிக்கின்றன என ஸ்டார்மர் கூறினார்.
ஈரானுக்கு எதிரான போரில் சட்ட அடிப்படை எதுவுமின்றி இணைய முடியாது:  டிரம்ப்புக்கு இங்கிலாந்து பிரதமர் பதில்
Published on

லண்டன்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலுக்கு ஆதரவாக இங்கிலாந்து செயல்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார்.

ஈரான் விவகாரத்தில் இங்கிலாந்து நிலைப்பாடு பற்றி குறிப்பிட்ட டிரம்ப், மிக மிக ஒத்துழைப்பின்றி செயல்படுகிறது. பிரதமர் கீர் ஸ்டார்மர் உறவுகளை முறிக்க பார்க்கிறார். அவர் வின்ஸ்டன் சர்ச்சில் இல்லை என ஆவேசத்துடன் கூறினார்.

Also Read
காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தி.மு.க. தலைமையகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை
ஈரானுக்கு எதிரான போரில் சட்ட அடிப்படை எதுவுமின்றி இணைய முடியாது:  டிரம்ப்புக்கு இங்கிலாந்து பிரதமர் பதில்

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் இங்கிலாந்தின் ஒத்துழைப்பு போதிய அளவில் இல்லை என கூறி, அதனால், தான் மகிழ்ச்சியாக இல்லை என டிரம்ப் கூறினார். இது அதிர்ச்சி தருகிறது என்றும் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய ஸ்டார்மர், மத்திய கிழக்கிலுள்ள நம்முடைய கூட்டு படை தளத்தில், அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காக டிரோன்களையும், ஏவுகணைகளையும் இங்கிலாந்து போர் விமானங்கள் தாக்கி அழிக்கின்றன. அதுவே சிறந்த உறவுக்கான நடவடிக்கை. நம் மக்களை பாதுகாக்க உளவு தகவல்களை தினமும் பகிர்ந்து வருகிறோம்.

அதுவே சிறந்த உறவுக்கான நடவடிக்கை. ஈரானுக்கு எதிரான தாக்குதலில் இணையாததற்கு, சட்ட அடிப்படையிலான எந்த காரணமும் இருப்பது போன்று தனக்கு தெரிய வரவில்லை. அதனால், அந்த தாக்குதலில் இங்கிலாந்து இணையவில்லை என தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com