பியர் கிரில்சுடன் இணைந்து காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

மேன் வெர்சஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்று சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்ட டிரைலர் வெளியாகி உள்ளது.
பியர் கிரில்சுடன் இணைந்து காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி
Published on

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான மேன் வெர்சஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்று சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்ட டிரைலர் வெளியாகி உள்ளது.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மலைகள், காடுகள், நதி, கடல் என பல்வேறு இடங்களிலும் பியர் கிரில்ஸ் சாகசப் பயணம் மேற்கொள்வதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

இந்நிலையில், பியர் கிரில்சுடன் இணைந்து பிரதமர் மோடி சாகசம் செய்யும் நிகழ்ச்சி குறித்த டிரலைர் வெளியாகி உள்ளது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய வனப்பகுதிக்குச் செல்வதை 180 நாடுகளில் உள்ள மக்கள் பார்ப்பார்கள். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் அறியப்படாத பக்கத்தைப் பார்ப்பார்கள் என குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com