இந்தியா, சீனா, ரஷியா சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை - டிரம்ப் குற்றச்சாட்டு

இந்தியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா, சீனா, ரஷியா சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை - டிரம்ப் குற்றச்சாட்டு
Published on

நியூயார்க்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நியூயார்க் நகரில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் பேசியதாவது:-

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதரப்பாக உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கில் இழப்பும், அமெரிக்கர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படுகிறது. ஆனால் சீனாவை 2030-ம் ஆண்டு வரை ஒன்றும் சொல்லமாட்டார்கள். ரஷியா மீண்டும் உலகின் மிகவும் மோசமான வருடமான 1990-ம் ஆண்டுக்கு திரும்பிவிட்டது. இந்தியா வளரும் நாடு என்பதற்காக நாம் பணம் தருகிறோம். நாங்களும் வளரும் நாடு தான்.

நமக்கு சிறிதளவு தான் நிலம் உள்ளது. ஆனால் இந்தியா, சீனா, ரஷியா போன்ற மற்ற நாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க, அதிக புகை வெளியிடும் தொழிற்சாலைகளை தூய்மையாக்க எதுவும் செய்யவில்லை. அவர்கள் கடலில் போடும் அத்தனை குப்பைகளும் லாஸ் ஏஞ்சல்சுக்கு மிதந்துவந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் விமானங்கள் முதல் பசுக்கள் வரை எதையும் நீண்டகாலம் வைத்திருப்பதில்லை. ஆனால் சீனாவில் என்ன நடக்கிறது. எனக்கு சுத்தமான காற்றும், தண்ணீரும் தேவை. இப்போது அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு சுத்தமான காற்று உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com