உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை கொள்கையுடன் இருக்கிறோம்- சீனா வெளியுறவு மந்திரி

உக்ரைன் போர் விவகாரத்தில் சீனா ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை கொள்கையுடன் இருக்கிறோம்- சீனா வெளியுறவு மந்திரி
Published on

சீனா,

உக்ரைன் போர் விவகாரத்தில் சீனா ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த சூழலில் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் யி, "உக்ரைன் நெருக்கடியைப் பொறுத்தவரை, ஒரு சார்பாக செயல்படாமல், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாமல் நடுநிலை தன்மையின் அடிப்படைக் கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறோம்.

ரஷியாவுடன் சீனா பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழப்படுத்தும்" என கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com