பாகிஸ்தானில் பாதிரியார் சுட்டுக்கொலை..!

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பாதிரியார் சுட்டுக்கொலை..!
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிஷப் வில்லியம் சிராஜ் மற்றும் பாதிரியார் நயீம் பேட்ரிக் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட பிஷப் வில்லியம் சிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிரியார் நயீம் பேட்ரிக் காயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பைக்கில் தப்பிச் சென்ற குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றவாளிகளை பிடிக்க நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதான இந்த சமீபத்திய தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை,

இந்த தாக்குதலுக்கு சர்வமத நல்லிணக்கம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பாகிஸ்தான் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதி ஹாபிஸ் முகமது தாஹிர் மற்றும் முதல் மந்திரி மெகமது கான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்துள்ள பாதிரியார் நயீம் பேட்ரிக்கிற்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

2017 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள் இரண்டாவது பெரிய மத சிறுபான்மையினராக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com