கூட்டத்தில் சிக்கிய பெண் டிக்டாக் பிரபலம்; ஆடையை கிழித்து, அந்தரத்தில் வீசிய கொடூரம்

பாகிஸ்தானில் பெண் டிக்டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்து, அந்தரத்தில் வீசிய சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் சிக்கிய பெண் டிக்டாக் பிரபலம்; ஆடையை கிழித்து, அந்தரத்தில் வீசிய கொடூரம்
Published on

லாகூர்

பாகிஸ்தானை சேர்ந்த பெண் டிக்டாக் பிரபலம். அவர் விதவிதமாக வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிடுவது அவர் வழக்கம். இதனால் ஏராளமான பிந்தொடர்பவர்கள் உள்ளனர். கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தைப் படம்பிடிப்பதற்காக, தனது நண்பர்கள் 6 பேருடன் மினார் -இ -பாகிஸ்தான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார்.

லாகூரின் இக்பால் பார்க் அருகே வந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் அவர்களை விரட்டினர். இதனால் செய்வதறியாது திகைத்த டிக்டாக் பிரபலம் தப்பிக்க ஓடினார். ஆனால், அந்தக் கும்பலில் சிலர் அவர் உடைகளை கிழித்தனர். அவரை அங்கும் இங்குமாகத் தள்ளினர். தரதரவென இழுத்தனர். மேலே தூக்கி வீசினர் இருந்தா லும் அதில் இருந்த சிலர், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களா லும் முடியவில்லை

இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வைரலானதை அடுத்து பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த டிக்டாக் பிரபலம் நேற்று லாகூர் லாரிஅட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் 400 பேர் கொண்ட கும்பல் தன்னையும் தன் நண்பர்களையும் கடுமையாகத் தாக்கிய தாகவும், உடைகளை கிழித்து இழுத்துச் சென்றதாகவும், அணிந்திருந்த நகைகளையும் நண்பரின் செல்போன், ரூ15 ஆயிரத்தை பறித்துக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

லாகூர் டிஐஜி சஜித் கிய்வானி இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com