

நியூயார்க்,
பயங்கரவாதிகள் பயணத்தை கண்டறிந்து முறியடிக்கும் திட்டத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நேற்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க ஐ.நா. எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஆதரவு அளித்து வருவதாக அவர் கூறினார். ஜப்பான், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். ஈராக்கில் தோல்வி அடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்கிருந்து பாதுகாப்பான இடம் தேடி செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் அப்படி சென்று தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, அவர்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் என்று அன்டோனியோ குட்டரஸ் பேசினார்.