கொரோனா மருந்து ஆராய்ச்சி: ‘பேஸ்புக்’ நிறுவனர் ரூ.185 கோடி நன்கொடை

கொரோனா மருந்து ஆராய்ச்சிக்கு ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ரூ.185 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
கொரோனா மருந்து ஆராய்ச்சி: ‘பேஸ்புக்’ நிறுவனர் ரூ.185 கோடி நன்கொடை
Published on

ஹூஸ்டன்,

உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்சுக்கு சொந்தமான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிக்காக ஒரு நிதியத்தை இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது.

இந்நிலையில், பில்கேட்சின் சீடரும், பேஸ்புக் நிறுவனருமான மார்க் ஜுகர்பெர்க், அந்த நிதியத்துக்கு உதவ முன்வந்துள்ளார். அவருக்கு சொந்தமான சான் ஜுகர்பெர்க் இனிஷியேட்டிவ் என்ற தொண்டு நிறுவனம், ரூ.185 கோடி நன்கொடை அளிக்கிறது.

இதை ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில், மார்க் ஜுகர்பெர்க்கும், அவருடைய மனைவி பிரிஸ்சில்லா சானும் தெரிவித்தனர். வைரசை குணப்படுத்த இதுவரை உள்ள மருந்துகளின் அடிப்படையில், கொரோனாவை தடுப்பதற்கான, பாதிப்பை குறைப்பதற்கான மருந்து ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜுகர்பெர்க் கூறினார்.

இந்த ஆராய்ச்சிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு பிறகு அதிக நன்கொடை அளிப்பது மார்க் ஜுகர்பெர்க் ஆவார். அவர் வெளிஅமைப்புக்கு அளித்த மிகப்பெரிய நன்கொடை இதுவே ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com