

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கொரோனா 24 மணி நேரத்துக்குள் 2,636 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் அங்கு புதிதாக 57 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 1,317 ஆக உயர்ந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனாலேயே தற்போது அங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 227 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.