பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனாவுக்கு பலி

பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகினர்.
பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனாவுக்கு பலி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல தளர்வுகளை கொண்டு வந்தார். மேலும் ரமலான் பண்டிகையை சமூக இடைவெளியுடன் கொண்டாடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அங்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

பாகிஸ்தானில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,600-ஐ தாண்டியுள்ளது. மேலும் அங்கு 24 மணி நேரத்துக்குள் கொரோனா 32 பேரின் உயிரையும் பறித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com