

ஜெனீவா,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் இந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் நேற்று ஜெனீவா நகரில் நிருபர்களிடம் பேசுகையில், கொரோனா வைரசை (கோவிட்-19) தொற்று நோய் என வகைப்படுத்த முடியும் என்றும், இதுபோன்ற நோய் தொற்றை இதற்கு முன் பார்த்தது இல்லை என்றும் கூறினார்.