ஸ்பெயினில் ஜூலை 1ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி

ஸ்பெயின் நாட்டில் ஜூலை 1ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் ஜூலை 1ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி
Published on

மேட்ரிட்,

சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் உலகின் இரண்டாவது நாடாக ஸ்பெயின் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஸ்பெயின் தற்போது 4-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு 2,82,852 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 28,752 பேர் பலியாகி உள்ளனர்.

ஸ்பெயினில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இப்போது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. எனவே கடந்த சில நாட்களாக வீட்டிற்குள் முடங்கியிருந்த மக்கள் வெளியே நடமாடத் துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் ஜூலை 1ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் வெளியுறவுத்துறை மந்திரி அரான்சா கோன்சலஸ் லயா செய்தியாளர்கள் சந்திப்பில், நாங்கள் மோசமான காலத்தை கடந்துவிட்டோம். ஜூலை 1ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் ஸ்பெயின் வருவதற்கு அனுமதி அளித்துள்ளோம். தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com