ஸ்பெயின்: கொரோனா ஊரடங்கு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது - கோர்ட்டு தீர்ப்பு

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைவான அளவே பதிவாகி வந்தநிலையில் நேற்று முன் தினம் 43 ஆயிரத்தை தாண்டி பதிவாகி இருந்தது. இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டி பதிவாகி இருந்தது. மேலும் அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 81 ஆயிரத்து 084 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. அவசரகால விதிகளின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வீட்டிலேயே இருக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தனர். மேலும் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அத்தியாவசிய வணிகங்கள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன.

நாடு இரண்டாவது அலையை எதிர்கொண்ட ஆண்டின் பிற்பகுதியில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், ஜூன் 2020 வரை இந்த சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பொதுமுடக்கம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com