டிரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய்யின் விலை திடீர் சரிவு

ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதன் தொடர்ச்சியாக எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக விற்பனையானது.
டிரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய்யின் விலை திடீர் சரிவு
Published on

நியூயார்க்

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வந்த போதிலும், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் வலைதள பதிவில் இன்று வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவும் ஈரானும் கடந்த 2 நாட்களாக மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மத்திய கிழக்கில் நம்முடைய பகைமைக்கு முற்றிலுமொரு தீர்வு காணப்பட உள்ளது.

Also Read
92,612 டன் எல்.பி.ஜி.யுடன் 2 இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தன: மத்திய அரசு தகவல்
டிரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய்யின் விலை திடீர் சரிவு

இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன். நடந்து வரும் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்து உள்ளார். இதில், கவனம் செலுத்திய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

டிரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய்யின் விலை 13 சதவீதத்திற்கும் கூடுதலாக சரிவடைந்து உள்ளது. இதில், பிரென்ட் கச்சா எண்ணெய், 17 அமெரிக்க டாலர் அல்லது 15 சதவீதம் என்ற அளவில் விலை குறைந்து, ஒரு பீப்பாய் 96 டாலர் என்ற அளவுக்கு விற்பனையாகிறது.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 13 அமெரிக்க டாலர் அல்லது 13.5 சதவீதம் அளவுக்கு குறைந்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 85.28 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதுடன், கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக விற்பனையானது. இந்த நிலையில், கச்சா எண்ணெய்யின் விலை அதிரடியாக குறைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com