அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு


அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
x

அமெரிக்காவின் நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் கார் புகுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

நியூ ஓர்லேன்ஸ் (லூசியானா மாகாணம்),

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் நகரில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தது.

அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அந்த கூட்டத்திற்குள் அதிவேகத்தில் ஒரு கார் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது பலமாக மோதியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரின் டிரைவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சம்சத் தின் ஜபார் என்பவர் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

1 More update

Next Story