இந்தியாவுக்கு ரகசியம் விற்றேனா? கொள்ளையடித்தேனா? திருமணம் செய்ய விரும்பினேன் மவுனம் கலைத்த இம்ரான்கான்

தனது 3 வது திருமணம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் , அரசியல்வாதியுமான இம்ரான்கான் மவுனத்தை கலைத்து உள்ளார்.#Imrankhan
இந்தியாவுக்கு ரகசியம் விற்றேனா? கொள்ளையடித்தேனா? திருமணம் செய்ய விரும்பினேன் மவுனம் கலைத்த இம்ரான்கான்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 1976ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை இடம்பிடித்து விளையாடியவர், இம்ரான்கான். இவருடைய தலைமையிலான பாகிஸ்தான் அணி 1992ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இம்ரான்கான் அரசியலில் குதித்தார். பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது எம்.பி.யாகவும் உள்ளார்.

1995ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த ஜெமிமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இம்ரான்கான். அவருடன் 9 ஆண்டுகள் இல்லற வாழ்க்கை மேற்கொண்டார். 2 ஆண் குழந்தைகளும் பிறந்தன. பின்னர் 2004ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு 2015ல் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேஹம் என்பவரை 2வது திருமணம் செய்தார். இந்த திருமண வாழ்விலும் அவருக்கு கசப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த 10 மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். தனது 2 திருமண வாழ்க்கையும் முறிந்து போனதால் மிகுந்த மன வேதனையுடன் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இம்ரான்கான் 3வதாக புஷ்ரா மனேஹா என்ற 40 வயது பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.

புஷ்ரா மனேஹா மூத்த சுங்க இலாகா அதிகாரி கவார் பரித்தின் முன்னாள் மனைவி ஆவார். இவர், இம்ரான்கானின் ஆன்மிக வழிகாட்டியும் ஆவார். இருவருக்கும் கடந்த 1ந்தேதி லாகூரில் ரகசியமாக திருமணம் நடந்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனது 3 வது திருமணம் குறித்து தனது மவுனத்தை இம்ரான் கான் களைத்து உள்ளார் . இப்படி ஒரு தகவல் வெளியானத்திற்கு நவாஸ் செரீபும் ஒரு பத்திரிகை அதிபரும் தான் காரனம் என குற்றம் சாட்டி உள்ளார்.

புஷ்ரா மனேஹா மற்றும் அவருடைய குழந்தைகள் மிகவும் பழமைவாத குடும்பத்தை சேர்ந்தவர்கள். நவாஸ் செரீப் மற்றும் மீர் ஷகில்-உர்-ரஹ்மான் ஆகியோர் தான், இத்தகைய தகவல் காரணம் அவர்களுடைய தீய பிரச்சாரம் அவர்களை எதிர்த்து போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டை பலப்படுத்தியது.

நான் 40 ஆண்டுகள் ஷெரிப்களை அறிந்திருக்கிறேன் நான் அவர்களின் அவலமான தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்திருக்கிறேன்.ஆனால் இந்த இழிந்த விவரங்களை அம்பலப்படுத்தும் நிலைக்கு நான் எப்போதும் குரல் கொடுக்க மாட்டேன். "

3 நாட்களாக நான் யோசிக்கிறேன் நான் வங்கியை கொள்ளையிட்னா அல்லது நாட்டின் பணத்தை மோசடி செய்தேனா, இந்தியாவிற்கு இரகசியங்களை வெளிப்படுத்தினேனா? இவற்றில் எதுவும் செய்யவில்லை, ஆனால் ஒரு பெரிய குற்றத்தை செய்து விட்டது போல் கூறுகிறார்கள். திருமணம் செய்து கொள்ள விரும்பியது குற்றமா?

என் நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் இதற்காக பிரார்த்தனை செய்யுங்கள், ஒரு சில வருடங்கள் தவிர நான் தனிப்பட்ட மகிழ்ச்சியைக் காண்கிறேன்.

இவர் தகவல் வெளியிட்டு சில நிமிடங்களில் நவாஸ் செரீப் பதிலுக்கு கூறியதாவது:-

கான் மறைந்து விட்டது என்று வருத்தம் " அவர் [கான்] இதைப் போன்ற ஏதாவது செய்திருந்தால், அவர் வெளியே வந்து அதை ஒப்புக் கொள்ள வேண்டும் "ஒரு அப்பாவி குடும்பத்தை வதந்திகளால் எதிர்கொள்ளும் போது கோழைபோல் மறைந்திருப்பவர் யார் என கூறினார்.

#Imrankhan #Nawazsharif #bushra

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com