யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை
Published on

கொழும்பு,

இலங்கை யாழ்ப்பாணம் நகரில் உள்ள பலாலி ராணுவ விமானநிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் நிதி உதவி வழங்கி இருந்தது. இந்தநிலையில் இந்த விரிவாக்க பணி முடிவடைந்ததை அடுத்து, வருகிற 17-ந்தேதி பலாலி சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே அங்கிருந்து முதற்கட்டமாக இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கும் 15-ந்தேதியே விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com