அதிபர் டிரம்ப் இங்கிலாந்திற்கு போவாரா?

இவ்வருடம் அதிபர் டிரம்ப் இங்கிலாந்திற்கு விஜயம் செய்வது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதிபர் டிரம்ப் இங்கிலாந்திற்கு போவாரா?
Published on

லண்டன்

இங்கிலாந்து அரசியின் பாரம்பரிய நாடாளுமன்ற உரையில் இங்கிலாந்திற்கு வருகைபுரியவுள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களின் பயண விவரங்கள் தேதியுடன் இடம் பெற, அதிபர் டிரம்பின் வருகைப்பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. இதனால் டிரம்ப்பின் விஜயம் சந்தேகமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஜனவரி மாதம் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அமெரிக்கா போன போது முறையாக அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அது ஏற்கவும்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் டிரம்ப் வருகைக்கான தேதி முடிவு செய்யப்படவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் டிரம்ப் இங்கிலாந்திற்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட இணையதள வாக்கெடுப்பு ஒன்று 1,00,000 ற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்றது. அதிபர் டிரம்ப் வரும்போது இங்கிலாந்து பிரதமரின் இல்லம் அமைந்துள்ள டவுனிங் ஸ்ட்ரீட்டில் போராட்டக்காரர்கள் நின்று கோஷமிடுவதை இங்கிலாந்து அரசு விரும்பவில்லை,.

சமீபத்தில் லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதல்களையொட்டி லண்டன் மேயருக்கும், அதிபர் டிரம்பிற்கும் இடையிலான வார்த்தப் போரும் வருகைக்கு ஒரு நெருடலாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com