

பலூசிஸ்தான்
பலூசிஸ்தானில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் பலியாகி உள்ளனர்.
பலூசிஸ்தானில் உள்ள பலூச் விடுதலை ராணுவம் வெளியிட்ட வீடியோ ஒன்றில், டிரோன் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் பலியான சம்பவம் பதிவாகி உள்ளது.
இதில், பலூசிஸ்தானின் மஸ்தங் மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி நடந்த டிரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஒருவர் மற்றும் மற்றொரு வீரர் என 2 பேர் பலியானார்கள். மொத்தத்தில், கடந்த 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடந்த 4 டிரோன் தாக்குதல்களில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்து உள்ளது.