போதை மருந்து, மயக்கம், 10 லட்சம் ஆபாச வீடியோக்கள்... 20 வருடங்களாக மனைவியை பலருக்கு விருந்து படைத்த சைக்கோ கணவர்

இந்த பாலியல் கொடுமைகள் நடந்தபோது, அவர் தூங்குவது போன்று நடிப்பார் என வழக்கில் தொடர்புடைய சிலர் கூறிய குற்றச்சாட்டுகளை அந்த பெண் மறுத்துள்ளார்.
போதை மருந்து, மயக்கம், 10 லட்சம் ஆபாச வீடியோக்கள்... 20 வருடங்களாக மனைவியை பலருக்கு விருந்து படைத்த சைக்கோ கணவர்
Published on: 

லண்டன்

போதை மருந்து கொடுத்து, மயக்கமடைய செய்து, 20 வருடங்களாக பெண்ணை 13 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் கிரேட்டர் மான்செஸ்டரில் ஸ்டாக்போர்ட் நகரில் வசித்து வரும் 60 வயது நபர் சர்ச்சையான வழக்கில் சிக்கியுள்ளார். இவர், 20 வருடங்களாக மனைவிக்கு போதை மருந்து கொடுத்து, மயக்கமடைய செய்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். 2004-ம் ஆண்டில் தொடங்கிய இந்த சம்பவத்தின்படி, அவர் அதுதொடர்பாக எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை ஆன்லைனில் பகிர்ந்து வந்திருக்கிறார்.

பாலியல் பலாத்காரம்

அவருடைய இந்த கொடூர செயல் இதனுடன் நின்று விடவில்லை. அவர் வேறு ஆண்களையும் வீட்டுக்கு அழைத்து, அவருடைய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

இந்த விசயம் எதுவும் அவருடைய மனைவிக்கு தெரிய வரவில்லை. ஏனெனில், மனைவிக்கு தெரியாமல் இரவில், போதை கலந்த ஒயின் கொடுத்து, அவரும், பிற ஆண்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வெளிநாட்டு பயணம்

இதற்காக பல கலவையான போதை மருந்துகளை கணவர் பயன்படுத்தி வந்திருக்கிறார். இதனால், சுய நினைவில்லாத சூழலிலேயே, அவருக்கு கொடுமைகள் நடந்துள்ளன. அவை பல கோணங்களில் படம் பிடிக்கப்பட்டும் வந்துள்ளன. இதற்கு சிலர் உதவியும் உள்ளனர்.

அந்த கணவர் ஓய்வு வாழ்க்கையை தோட்ட வேலை, மனைவியுடன் வெளிநாட்டு பயணம், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதுபோக்குவது என மகிழ்ச்சியாக இருந்துள்ளார். பகலில் மனைவியுடன் பூங்கா, ஓட்டல் என சுற்றி பார்த்து வந்தவர், இரவில் இந்த கொடுமைகளை செய்துள்ளார்.

முன்னாள் கவுன்சிலர்

இதில், அவருடைய கணவர் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மான்செஸ்டர் மின்சுல் ஸ்ட்ரீட் கிரவுன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது.

அவருடைய மனைவியின் பாதுகாப்புக்காக அந்நபரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. கோர்ட்டில், வழக்கறிஞர் லூயிஸ் ஆக்ளே கூறும்போது, அந்த நபரின் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்துள்ளன.

62 பாலியல் சம்பவங்கள்

அவற்றில், பலர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகள் உள்ளன என லூயிஸ் கூறினார்.

இதில், கோர்ட்டு விசாரணையில், 62 பாலியல் சம்பவங்களை அந்த கணவர் ஒப்பு கொண்டிருக்கிறார். அவருடன் வேறு 4 பேரும் குற்ற செயல்களை ஒப்பு கொண்டுள்ளனர். அவர்கள் 38 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள். அதுபற்றி தனியாக விசாரிக்கப்படுகிறது.

நேரடி தொடர்பு

இதுதவிர 28 முதல் 70 வயதுக்குட்பட்ட 9 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், அவற்றை அவர்கள் அனைவரும் மறுத்துள்ளனர். எனினும், அவர்களில் 7 பேர் தொடர்ந்து, தொடர்பில் இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்ற 2 பேருக்கு நேரடி தொடர்பு இல்லாதபோதும், அவற்றை ஊக்குவித்தும், அதற்கு உதவி செய்தும் வந்துள்ளனர்.

இந்த சூழலில், 9 ஆண்டுகளாக இந்த தம்பதி இடையே பாலியல் உறவு எதுவும் இல்லை என மனைவி போலீசாரிடம் கூறியுள்ளார். கணவரும், அதுபற்றி தன்னிடம் புகாராக எதுவும் கூறவில்லை. அதுபற்றி இருவரும் ஒருபோதும் விவாதித்ததும் இல்லை என அந்த பெண் கூறியுள்ளார். ஆனால், சைக்கோ போன்ற செயல்பட்ட கணவரை அவர் அதிக அளவில் நம்பியுள்ளார்.

கோர்ட்டில் ஆஜர்

இந்நிலையில், அந்த பெண் நேற்று விசாரணையில் பங்கேற்றார். அப்போது, இந்த பாலியல் கொடுமைகள் நடந்தபோது, அவர் தூங்குவது போன்று நடிப்பார் என வழக்கில் தொடர்புடைய சிலர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவை முற்றிலும் முட்டாள்தன பேச்சுகள் என குறிப்பிட்டார். அவருடைய கணவர் செய்த விசயங்கள் எல்லாம் தன்னுடைய தவறா? என்றும் அவர் கோர்ட்டில் கேட்டுள்ளார்.

அவருக்கு நடந்த கொடுமையான விசயங்களை பற்றி அவரிடம் கோர்ட்டில் விளக்கி கூறப்பட்டு உள்ளது. அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நினைவில் இல்லை என்றும் அந்த பெண் கூறியதுடன், அதனை உண்மை என்றே நம்ப முடியவில்லை என்று கூறினார். நீங்கள் ஏதோ ஒரு தவறு செய்து வீட்டீர்கள் என்றே நினைக்கிறேன் என்றும் கோர்ட்டில் கூறியிருக்கிறார்.

மற்றொரு சம்பவம்

ஏற்கனவே மற்றொரு சம்பவத்தில், தெற்கு இங்கிலாந்தின், வின்செஸ்டர் நகரில் ஸ்விண்டன் பகுதியில் வசித்து வரும், 50 வயதுடைய பிலிப் யங் என்பவர், அவருடைய முன்னாள் மனைவியான ஜோவான் யங்கை இதுபோன்று 10 வருடங்களுக்கும் கூடுதலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சைக்கோ கணவராக செயல்பட்ட அவருடன், வேறு 4 பேரும் சேர்ந்து கொண்டனர். இந்த வழக்கில், டிசம்பர் இறுதியில் தண்டனை அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதற்கு முன்பு, பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவத்தில், கிஸ்செல் பெலிகோட் என்ற பெண்ணை, அவருடைய கணவர் பல ஆண்டுகளாக இதுபோன்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வேறு நபர்களையும் அதில் ஈடுபடுத்தி உள்ளார். இதில், 51 பேர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டனர்.

கிஸ்செல்லின் கணவர் டாமினிக் பெலிகோட் (வயது 71) மற்றும் குற்றவாளிகளில் சிலர் நடந்த விவரங்களை ஒப்பு கொண்டுள்ளனர். எனினும், வேறு சிலர் கூறும்போது, டாமினிக்கின் மனைவி தூங்கி கொண்டிருக்கிறார் என நினைத்தோம் என்றும் ஒரு சிலர் இது ஒப்புதலுடனேயே நடைபெறுகிறது என நினைத்தோம் என விசாரணையில் கூறியுள்ளனர்.

X