பாகிஸ்தான், திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேற்று பாகிஸ்தான் மற்றும் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.
பாகிஸ்தான், திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்
Published on

இஸ்லாமாபாத்,

திபெத்தி இன்று காலை 4.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவில் 2.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 27 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.93 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.11 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இன்று காலை 9.57 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.76 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 72.68 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் நேற்று, அதிகாலை 1.56 மணியளவில் ரிக்டர் 3.6 அளவில் ஏற்பட்டது. மேலும் நேற்று திபெத்திலும் காலை 5.52 மணியளவில் ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com