பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.680 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.263 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com