பூடான், திபெத், மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அதிர்ச்சி

மியான்மரில் 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
உள்படம்:  திபெத்
உள்படம்:  திபெத்
Published on

திம்பு,

திபெத் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்த சூழலில், இன்று மாலை பூடான், திபெத், மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில், திபெத்தில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் ரிக்டரில் 3.7 அளவிலான நிலநடுக்கம் பதிவானது. நேற்றும் திபெத்தில் ரிக்டரில் 3.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலையில், தஜிகிஸ்தானில் இன்று காலை 6.06 மணியளவில் ரிக்டரில் 4.6 அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

இந்த சூழலில், பூடானில் காலை 11 மணியளவில் ரிக்டரில் 2.8 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இன்று பிற்பகல் 2.17 மணியளவில் திபெத்தில் ரிக்டரில் 3.0 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவானது. இதேபோன்று மியான்மரில் 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதன்படி, மாலை 4.13 மணியளவில், ரிக்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கமும், மாலை 4.27 மணியளவில், ரிக்டரில் 3.5 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மியான்மரில் நேற்றிரவு 7.48 மணியளவில், ரிக்டரில் 3.4 அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது. துருக்கியில் நேற்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், இந்தியாவை நெருங்கியுள்ள அண்டை நாடுகளில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com