ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மலேசியா அரசு அனுமதி

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவை மலேசியா எடுத்துள்ளது.
 ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மலேசியா அரசு அனுமதி
Published on

ஈரான் - அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. எரிபொருள் செலவுகளை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மலேசியாவில் வீட்டில் இருந்தே பணியாற்ற அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் இந்த மாதம் முதல் வீட்டிலிருந்து பணியாற்றத் தொடங்குவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15 முதல் இந்த விதி அமலுக்கு வரும். அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

எரிபொருள் பயன்பாட்டை குறைத்து,விநியோகத்தை நிலையாக வைத்து இருக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு கூறியுள்ளது. ஈரான் - அமெரிக்கா போர் மேலும் தீவிரம் அடையும் என்று சொல்லப்படும் நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் இப்போது இருப்பதை விட பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில்தான், மலேசியா சிக்கன நடவடிக்கையாக வொர்க் பிரம் ஹோம் முடிவை கொடுத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com