இங்கிலாந்தில் கடும் வெப்பம்: பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுரை

இங்கிலாந்தில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடும் வெப்பம்: பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுரை
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின சில பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. மேலும், நகர்புறங்களில் இரவு நேரத்தில் அதிக அளவு வெப்பம் நிலவும் எனவும் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, அதிக வெப்பநிலை காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு அதிகப்படியாக 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com