ரஷியா: பனிப்புயலில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 5 பேர் பலி

ரஷியாவில் எல்பிரஸ் மலை உள்ளது.
ரஷியா: பனிப்புயலில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 5 பேர் பலி
Published on

மாஸ்கோ,

ரஷியாவில் எல்பிரஸ் மலை உள்ளது. ஜார்ஜியா எல்லையில் அமைந்துள்ள இம்மலையில் ஏற உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் வருகின்றனர்.

இந்நிலையில், போஸ்னியா நாட்டை சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் எல்பிரஸ் மலையில் ஏறியுள்ளனர். மலையேற்ற வீரர்கள் நேற்று 5 ஆயிரத்து 350 உயரத்தில் மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென பனிப்புயல் வீசியது. இதில் மலையேற்ற வீரர்கள் 7 பேரும் சிக்கிக்கொண்டனர்.

5 பேர் பலி

இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 2 மலையேற்ற வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த பனிப்புயலில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

இதில், 2 மலையேற வீரர்களின் உடல்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 மலையேற்ற வீரர்களின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மோசமான வானிலை காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்கும்பணி தாமதாமாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com