ஹபீஸ் சயீத்தின் அன்றாட செலவுக்கு பணம் அனுமதிக்க வேண்டும் -ஐநாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை

சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு தேவையான அடிப்படை செலவுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு குழுவிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்து உள்ளது.
ஹபீஸ் சயீத்தின் அன்றாட செலவுக்கு பணம் அனுமதிக்க வேண்டும் -ஐநாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை
Published on

நியூயார்க்

மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக விளங்கிய லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்திற்கு ஐநா பொருளாதார தடை விதித்து உள்ளது.

சயீத் தனது முழுநேரமும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்பு ஒரு காலத்தில் கல்லூரி பேராசிரியராக இருந்தார். அவரது ஓய்வூதியம் பாகிஸ்தான் அரசால் அவரது வங்கி கணக்கு ஒன்றில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் யு.என்.எஸ்.சி குழுவிடம் பாகிஸ்தான் ஒரு கோரிக்கை வைத்து உள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானம் 1267-க்கிணங்க பாகிஸ்தான் அரசாங்கத்தால் ஹபீஸ் சயீத் வங்கிக் கணக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட அதில் உள்ள நிதியை ரூ.1.5 லட்சம் (அமெரிக்க டாலர் அல்லது 68,000 ரூபாய்) எடுக்க விலக்கு அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரி உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஜிகாதிகளுக்கு இடையிலான உறவை இது எடுத்துக்காட்டுகிறது. இரண்டாவதாக, இது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பில் ஹபீஸ் சயீத்தின் செல்வாக்கைப் பற்றிய இந்தியாவின் புரிதலையும் தகவலையும் உறுதிப்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com