உலகிலேயே முதல் முறையாக 5-ம் தலைமுறை செல்போன் சேவை அறிமுகம் - சீனாவின் ஷாங்காய் நகரம் சாதனை

உலகிலேயே முதல் முறையாக 5-ம் தலைமுறை செல்போன் சேவை அறிமுகம் செய்து, சீனாவின் ஷாங்காய் நகரம் சாதனை படைத்துள்ளது.
உலகிலேயே முதல் முறையாக 5-ம் தலைமுறை செல்போன் சேவை அறிமுகம் - சீனாவின் ஷாங்காய் நகரம் சாதனை
Published on

பீஜிங்,

சீனாவின் ஷாங்காய், உலகின் முதலாவது 5-ம் தலைமுறை செல்போன் சேவை தொழில்நுட்ப மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது. அகண்ட அலைவரிசை ஜிகாபைட் நெட்வொர்க் வசதியையும் ஷாங்காய் பெற்று விட்டது.

5-ம் தலைமுறை செல்போன் சேவை தொழில் நுட்பம், செல்போன்களில் அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய வகை செய்கிறது. குறிப்பாக நான்காம் தலைமுறை செல்போன் சேவை தொழில் நுட்பத்தை விட 10 முதல் 100 மடங்கு அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய முடியும். சீன அரசின் தொலைதொடர்பு நிறுவனமான சீனா மொபைல், ஷாங்காய் மாவட்டத்தின் ஹாங்காவ் என்ற இடத்தில் இந்த 5-ம் தொலைமுறை செல்போன் சேவையை நேற்று தொடங்கியது. இந்த சேவையை வழங்குவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே அங்கு 5-ம் தலைமுறை தரை கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.

அமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் இந்த 5-ம் தலைமுறை செல்போன் சேவையை சோதனை ரீதியில் வழங்குவதற்காக சீனாவின் புகழ்பெற்ற ஹூவாய் நிறுவனம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com