அமெரிக்க மதசுதந்திர அறிக்கைக்கு முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தடை விதிக்க சிபாரிசு செய்த அமெரிக்க மத சுதந்திர அறிக்கைக்கு முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மதசுதந்திர அறிக்கைக்கு முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம்
Published on

புதுடெல்லி,

சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடையவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சிபாரிசுகளை செய்துள்ளது.

இந்நிலையில், அந்த அறிக்கைக்கு இந்தியாவை சேர்ந்த 25 முன்னாள் நீதிபதிகள், 119 ஓய்வுபெற்ற அதிகாரிகள், 131 முன்னாள் ராணுவ அதிகா ரிகள் உள்பட சுமார் 275 பேர் கூட்டாக கையெழுத்திட்டு கண்டனம் தெரி வித்துள்ளனர். சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. அறிவு வறட்சியை காட்டுகிறது. இந் திய மக்களுடனான அமெரிக்காவின் உறவை சீர்குலைக்கும்வகையில் அறிக்கை உள்ளது என்று அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com