பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தீவிர அரசியலுக்கு திரும்புகிறார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தீவிர அரசியலுக்கு திரும்ப உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தீவிர அரசியலுக்கு திரும்புகிறார்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவர் துபாயில் வசித்து வருகிறார். அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியையும் அவர் நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அந்த கட்சியின் செயல்பாடுகள் முடங்கின. இந்நிலையில், முஷரப், தனது கட்சியை புதுப்பித்து, மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புகிறார். பாகிஸ்தான் ஊடகங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.

முஷரப், கடந்த மாதம் லண்டனில் 12 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு நன்றாக குணமடைந்து இருப்பதாகவும், அதனால் தீவிர அரசியலுக்கு திரும்புவதாகவும் அவரது கட்சியின் பொதுச்செயலாளர் மெஹ்ரீன் மாலிக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com