இலங்கையில் கனமழை, வெள்ளம் - 4 பேர் பலி

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் கனமழை, வெள்ளம் - 4 பேர் பலி
Published on

கொழும்பு,

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் பாதுகாப்பான இடங்களில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் அடக்கம். கனமழை வெள்ளத்தில் சிலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com