பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் பிரான்ஸ்; மீறினால் ரூ. 13 ஆயிரம் அபராதம்...!

தடை உத்தரவு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் பிரான்ஸ்; மீறினால் ரூ. 13 ஆயிரம் அபராதம்...!
Published on

பாரிஸ்,

ஐரோப்பிய நாடான பிரான்சில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, குழந்தைகள் அடிக்கடி செல்லும் பகுதிகளான கடற்கரைகள், பூங்காக்கள், பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இந்த தடைக்கு 62 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரான்சில் ஜூலை 1ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த தடை உத்தரவு இ-சிகிரெட்டுகளுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டீக்கடைகளின் மாடிகளில் நின்று புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com