எரிபொருள் தட்டுப்பாடு; நேபாளத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவது பற்றியும் தேவையான கட்டமைப்பை சட்ட முறைப்படி உருவாக்கவும் மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு; நேபாளத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
Published on

காத்மண்டு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிறத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்காசியாவில் காணப்படும் நீண்டகால மோதல் போக்கால், எரிபொருள் தட்டுப்பாடு பரவலாக அதிகரித்து காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து, நேபாள அரசு இன்று கூடி அதுபற்றி ஆலோசனையில் ஈடுபட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. நேபாளத்தின் காத்மண்டு நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மந்திரிகள் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில், சனி மற்றும் ஞாயிறு என வாரத்திற்கு இரு நாட்கள் விடுமுறை விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Also Read
விமான நிலையத்தில் சரிந்த இருதய நோயாளி; உடனடியாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய சி.ஐ.எஸ்.எப். அதிகாரி
எரிபொருள் தட்டுப்பாடு; நேபாளத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி மையங்கள் நாளை முதல், இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட உள்ளது. கல்வி மையங்கள் தவிர்த்து, அரசு அலுவலகங்கள் அனைத்தும் வேலை நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதேபோன்று, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவது பற்றியும் தேவையான கட்டமைப்பை சட்ட முறைப்படி உருவாக்கவும் மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com