டுவிட்டருக்கு அளித்து வந்த விளம்பரத்தை தற்காலிகமாக நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ்

டுவிட்டருக்கு அளித்து வந்த விளம்பரத்தை தற்காலிகமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

எலான் மஸ்க் சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, டுவிட்டரில் கட்டண அடிப்படையிலான விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக டெஸ்லா நிறுவனத்தின் பேட்டி நிறுவனமானஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய உரிமையாளரின் தலைமையின்கீழ் டுவிட்டர் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பது குறித்து அந்நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாகவும், சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் வணிகத்தின் இயல்பான போக்கைப் போலவே, நாங்கள் எங்கள் கட்டண விளம்பரங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம் என்றும் டுவிட்டரில் எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு தொடர்புகள் தொடரும் என்றும் ஜெனரல் மேட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com