ராணுவ விமானத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்!!

ஜெர்மனியில் ராணுவ விமானம் ஒன்று தற்காலிக கொரோனா தடுப்பூசி மையமாக செயல்பட்டு வருகிறது.
ராணுவ விமானத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்!!
Published on

பெர்லின்,

ஜெர்மனியில் ராணுவ விமானம் ஒன்று தற்காலிக கொரோனா தடுப்பூசி மையமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசுடன் அந்நாட்டு விமானப்படை கை கோர்த்துள்ளது.

அதன் ஒரு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இந்த ராணுவ விமனமானது தற்போது தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் சாமானியர்களும் தங்கள் வாழ்நாளில் ராணுவ விமானத்திற்குள் சென்று தடுப்பூசி செலுத்துக் கொள்வது மட்டுமல்லாது, விமானத்தைப் பார்வையிடவும் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள காசெல் விமான நிலையத்தில் உள்ள ஏர்பஸ் ஏ400எம் ராணுவ விமானத்தில், கடந்த வாரம் சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது.அதில் 500 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டன.இதற்காக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com