உலகளவில் முழுகெலும்புள்ள விலங்கு இனங்கள் 52 ஆண்டில் 73 சதவீதம் வீழ்ச்சி

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுத்தது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் இயற்கையை மீட்டெடுக்க முடியும் என உலகளாவிய இயற்கை நிதியத்தைச் சேர்ந்த ரவி சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மீட்டெடுப்பு.
Published on: 

பெர்ன்,

உலகில் உள்ள முதுகெலும்புள்ள விலங்கு இனங்களின் எண்ணிக்கை கடந்த 52 ஆண்டுகளில் 73 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

முழுகெலும்புள்ள விலங்கு இனங்கள் 52 ஆண்டில் 73 சதவீதம் சரிவு

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள உலகளாவிய இயற்கை நிதியம் (WWF) எனப்படும் உலகளாவிய இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு, 'லிவிங் பிளானட் ரிப்போர்ட் - 2026' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் முதுகெலும்புள்ள விலங்குகள் எனப்படும் பாலுாட்டிகள், மீன்கள், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை கடந்த 1970 முதல் 2022 வரையிலான 52 ஆண்டுகளில் 73 சதவீதம் குறைந்து பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

தரைவாழ் விலங்கினங்கள் 69 சதவீதம் சரிவு

கடந்த 1970 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், விலங்கு இனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடமாட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி நன்னீரில் வாழும் விலங்கினங்கள் அதிகபட்சமாக 85 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. தரைவாழ் விலங்கினங்களில் 69 சதவீதமும், கடல்வாழ் உயிரினங்கள் 59 சதவீதமும் சரிவு ஏற்பட்டுள்ளது.

புலிகளின் எண்ணிக்கை மீட்டெடுப்பு

வனப்பகுதிகளை அழித்தல், இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக சுரண்டுதல், காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு போன்றவை வனவிலங்கு அழிவுக்கு காரணமாக கூறப்படுகின்றன. இந்த அமைப்பின் இந்தியாவுக்கான தலைமை அதிகாரி ரவி சிங், புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுத்தது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் இயற்கையை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com