

மாஸ்கோ,
கொடிய விஷத்தாக்குதலுக்கு உள்ளான ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி பணமோசடி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நவால்னி மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்ததால் அலெக்சி நவால்னி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு அவருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இந்த கருத்தை தெரிவித்து வரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நவால்னியை ரஷிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் தற்போது ரஷிய நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
இந்தநிலையில், அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி உருவாக்கிய வாக்குப்பதிவு செயலி, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.