"சீனாவுக்கு தனி கூகுள் அறிமுகம் இல்லை" - சுந்தர் பிச்சை திட்டவட்டம்

சீனாவுக்கு தனியாக கூகுள் தேடு பொறி சேவையை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
"சீனாவுக்கு தனி கூகுள் அறிமுகம் இல்லை" - சுந்தர் பிச்சை திட்டவட்டம்
Published on

சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழுவில் புகார்அளிக்கப்பட்டிருந்தது.

விசாரணைக்கு நேரில் ஆஜரான சுந்தர் பிச்சை, சீனாவுக்கான சேவைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருப்போம் என்றார். சீனாவில் இண்டெர்நெட் செயல்பட கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் கூகுள் 2010-ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com