

கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்காவில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் தென்கிழக்கே ஜோகனர்ஸ்பெர்க் நகரில் உள்ள விடிலா நகரில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதிக்குள் நேற்று இரவு நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
அதேபோல், அந்நாட்டின் கேப் டவுன் நகரில் உள்ள லிவண்டெ நகரில் உள்ள கடைக்குள் நேற்று இரவு புகுந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். இதன் மூலம் இரு துப்பாக்கி சூடு சம்பவங்களில் மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், இருவேறு சம்பவங்களில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.