‘எச்-1 பி’ விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் - டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை

எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.
‘எச்-1 பி’ விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் - டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு எச்-1 பி விசாக்களை அந்த நாடு வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் எச்-1 பி விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் போட்டி நிலவுகிறது.

இப்போது இந்த விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இந்த விசாவுக்காக விண்ணப்பிக்கிற நிறுவனங்கள், விண்ணப்பங்களை முன்கூட்டியே மின்னணு வடிவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி முறை கொண்டு வர உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கும், அதிக சம்பளம் பெறுகிறவர்களுக்கும் மட்டுமே இந்த விசா கிடைப்பதை நோக்கமாகக் கொண்டுதான் டிரம்ப் நிர்வாகம் இந்த மாற்றத்தை கொண்டு வர உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com