சிறப்பான பணிகளை செய்கிறார்: பிரதமர் மோடிக்கு டிரம்ப் புகழாரம்

பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது என்று டிரம்ப் கூறினார்.
சிறப்பான பணிகளை செய்கிறார்: பிரதமர் மோடிக்கு டிரம்ப் புகழாரம்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை பாரட்டினார். டிரம்ப் கூறியதாவது: மோடியுடன் நான் மிகவும் நல்ல உரையாடல் நடத்தினேன். இந்தியாவில் உள்ள சிறந்த நண்பர் அவர். சிற்பப்பான பணிகளை செய்து வருகிறார்” என்றார். மேற்காசிய போர் விவகாரம், பிராந்திய பதற்றம் ஆகியவற்றிற்கு மத்தியில், பிரதமர் மோடியை டிரம்ப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மோடியுடன் தொலைபேசியில் டிரம்ப் பேசியிருந்தார். சுமார் 40 நிமிடங்கள் இருவரும் உரையாடினர். இந்த உரையாடல் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த மோடி, , மேற்காசியாவின் நிலைமை குறித்தும் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அனைத்து துறைகளிலும் முழுமையான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com