அமெரிக்காவில் தரையில் மோதி நொறுங்கிய ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டரின் இறக்கை தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவில் தரையில் மோதி நொறுங்கிய ஹெலிகாப்டர்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் கிளே டவுன்ஷிப் நகரில் சொகுசு நட்சத்திர விடுதி உள்ளது. குளக்கரை ஓரத்தில் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டலில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உள்ளூர் பிரபலம் ஒருவர் ஹெலிகாப்டரில் அந்த சொகுசு விடுதிக்கு வந்தார். விடுதி முன்பாக இருந்த இடத்தில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அதன் இறக்கை தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஹெலிகாப்டர் நொறுங்கியது. அப்பளம்போல் நொறுங்கிய ஹெலிகாப்டரில் சிக்கி 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com