அமெரிக்காவில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்: குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு

ரேடியோ கோபுரத்தில் மோதி ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹூஸ்டன்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஹூஸ்டன் நகரில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ரேடியோ கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதியது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 4 பேரும் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். ஹெலிகாப்டர் இடித்த உடன் தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் கீழே விழும் கோரமான விபத்தின் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
The moment a helicopter crashed into a radio tower in Houston killing four was caught on a nearby security camera. https://t.co/nKV9mW4Vim pic.twitter.com/pd8OnH0RGj
— USA TODAY Video (@usatodayvideo) October 21, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





