பாகிஸ்தானில் இந்துக்கள் சுதந்திரமாக உள்ளனர் - அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேச்சு

பாகிஸ்தானில் மொத்தம் 3 முதல் 4 சதவீத அளவிற்கு இந்து மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
பாகிஸ்தானில் இந்துக்கள் சுதந்திரமாக உள்ளனர் - அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேச்சு
அதிபர் ஆசிப் அலி சர்தாரி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் உலகின் மற்ற பகுதிகளில் இருப்பதை போலவே மிகவும் சுதந்திரமாகவும் நலமாகவும் வாழ்கிறார்கள்" என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அதிபர் சர்தாரி, இந்தியாவை கடுமையாக விமர்சித்தும், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேசியதாவது:-

முழு சுதந்திரம்

பாகிஸ்தானில் மொத்தம் 3 முதல் 4 சதவீத அளவிற்கு இந்து மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகின் வேறு எந்த ஒரு நாட்டில் சிறுபான்மையினர் எப்படி இருக்கிறார்களோ, அதேபோல அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரமாகவும், நலமாகவும் அவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர்.

சகிப்புத்தன்மை

நாங்கள் பிற மதத்தினரை மதிக்கும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இங்குள்ள இந்துக்கள் இந்தியர்களுடன் வாழ்வதை விட, எங்களோடு பாகிஸ்தானிலேயே தொடர்ந்து இருப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள்.

இந்தியாவின் சுயநல திட்டம்

இந்தியர்களுக்கு என்று எப்போதும் ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்கென ஒரு சொந்த செயல்திட்டத்தை கொண்டு இயங்கி வருகிறார்கள். இந்தியர்கள் இப்போதும் 'அகண்ட பாரதம்' என்ற கொள்கையைத்தான் தீவிரமாக நம்புகிறார்கள். ஆனால், அதற்கு இடையில் கடந்து வந்த பல முக்கிய விஷயங்களை அவர்கள் முற்றிலும் மறந்துவிட்டார்கள்.

இவ்வாறு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேசினார். சர்தாரியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com