இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.5 ஆக பதிவு

இந்தோனேசியாவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.5 ஆக பதிவு
Published on

செராம்,

இந்தோனேசியாவில் இன்று காலை 5.16 மணியளவில் செராம் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவு ஆகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களில் ஓடி வந்தனர். எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடப்படவில்லை. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com