கொரோனா நெருக்கடியில் இந்தியாவின் செயல்பாடு: சர்வதேச நிதியம் பாராட்டு

கொரோனா நெருக்கடியில் துரிதமாக செயல்பட்டதாக இந்தியாவுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது, இந்தியா துரிதமாக செயல்பட்டது, நல்ல பதிலடி கொடுத்தது என்று சர்வதேச நிதியம் ஐ.எம்.எப். பாராட்டி உள்ளது. குறிப்பாக நிதி ஆதரவு அளித்தது, பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு ஆதரவை அதிகரித்தது என கூறியது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் சீர்திருத்தங்களையும், தனியார் மயத்தையும் தொடர்கிறது எனவும் சர்வதேச நிதியம் கூறி உள்ளது. மேலும், அதிகாரிகள் தொடர்ந்து கட்டமைப்பு சீர்திருத்தங்களை செய்ததாகவும் சர்வதேச நிதியம் பாராட்டி இருக்கிறது. இந்தியாவின் பொருளதார வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 9.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 8.5 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com