பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டார்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றார். #ImranKhan
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டார்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் இம்ரான் கான் ஆட்சியமைக்கிறார். இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றார். இம்ரான் கான் கட்சியுக்கும், நவாஸ் செரீப் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது.

இதில் பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி கலந்துக்கொள்ளவில்லை. இம்ரான் கானுக்கு 176 வாக்குகளும், ஷாபாஸ் செரீப்பிற்கு 96 வாக்குகளும் கிடைத்தது. வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றதை அடுத்து இம்ரான் கான் பாகிஸ்தானில் 22 வது பிரதமராக பதவியேற்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com