பாகிஸ்தான் அரசின் எதிர்ப்பை மீறி இம்ரான் கான் ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசின் எதிர்ப்பை மீறி இம்ரான் கான் ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி
Published on: 

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும், பிரதமருமான இம்ரான் கான் பதவியிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்து ஊழல் வழக்குகள் பாய்ந்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பெரும்பாலான வழக்குகளில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவர் இன்னும் சிறையிலேயே உள்ளார்.

இந்த நிலையில், தங்களது தலைவரை விடுதலை செய்யக் கோரி அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் எதிர்க்கட்சியினர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டள்ளனர். இந்தப் பேரணியைத் தடுத்து நிறுத்தவும், போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்கவும் பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

இஸ்லாமாபாத்தின் முக்கிய நுழைவு வாயில்கள் மற்றும் நெடுஞ்சாலைகளை மறித்து, மணல் நிரப்பப்பட்ட ராட்சத இரும்பு கன்டெய்னர்களைக் கொண்டு போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் மிகப்பெரிய தடுப்பு அரண்களை அமைத்தனர். இதற்காக, கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக ரீதியான சரக்கு லாரிகள் மற்றும் கன்டெய்னர்களைப் போலீசார் கட்டாயமாகப் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே பாகிஸ்தான் அரசுடன் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை நள்ளிரவில் தோல்வி அடைந்ததால், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நேற்று தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பிரமாண்ட பேரணியை மேற்கொண்டனர்.

இம்ரான் கானை அவரது சொந்த டாக்டர்கள் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும், கைது செய்யப்பட்ட அவரது சகோதரிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியபடி லட்சக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியை ஒட்டி இஸ்லாமாபாத் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் கன்டெய்னர்கள் மூலம் சீல் வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான ராணுவத்தி னர் குவிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com