ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்தினால் உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்து - இம்ரான் கான்

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக நாடுகள் உதவ முன் வர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்தினால் உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்து - இம்ரான் கான்
Published on

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இஸ்லாமாபாத்தில் உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்தாக முடியும்.ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக நாடுகள் உதவ முன் வர வேண்டும்

மனிதாபிமான நெருக்கடியை தவிர்க்க ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எல்லா வழிகளிலும் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்.பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு தேவைப்படும் உதவிகளை மேற்கொள்ள வரும் மனிதாபிமான உதவி அமைப்புகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக ரூ.500 கோடி நிவாரணத் தொகை ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை, உள்துறை, நிதித்துறை மந்திரிகள் மற்றும் ராணுவ தலைமை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்பட மூத்த அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com