மரியம் நவாசுக்கு எதிராக பாகிஸ்தான் மந்திரி ஆபாசமான கருத்து

எதிர்க்கட்சியை சேர்ந்த மரியம் நவாசுக்கு எதிராக பாகிஸ்தான் மந்திரி ஆபாசமான கருத்து குவியும் கண்டனங்கள்
மரியம் நவாசுக்கு எதிராக பாகிஸ்தான் மந்திரி ஆபாசமான கருத்து
Published on

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) துணைத் தலைவர் மரியம் நவாஸ் குறித்து பேசிய அவதூறான கருத்துக்களுக்காக பாகிஸ்தான் மத்திய மந்திரி அலி அமீன் காந்தபூர் கண்டங்களை எதிர்கொண்டுள்ளார்.

வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதன் காரணமாகவே மரியம் நவாஸ் அழகாக இருக்கிறார் என்று வெளிப்படையாக பாகிஸ்தான் மந்திரி கூறினார் இதனால் அவர் கண்டனத்தை எதிர் கொண்டு வருகிறார்.

கில்கிட் பலுசிஸ்தானின் ஷிகர்ந்கரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய பாகிஸ்தான் மத்திய மந்திரி அலி அமீன் காந்தபூர் "மரியம் நவாஸ் அழகாக இருக்கிறார், நான் உண்மையை பேசுவேன், ஆனால் இதைக் கேளுங்கள் நவாஸ் ஷெரீப்பின் இரண்டு முறை ஆட்சிகளின் போது அவர் பல கோடி கணக்கான தொகையை அறுவை சிகிச்சைகளுக்கு செலவிட்டார், உங்கள் வரிப் பணத்தைப் பயன்படுத்தி தன்னை அழகாக்கி கொண்டார்" என கூறினார்

பாகிஸ்தானில் உள்ள சமூக ஊடகங்களில் மத்திய அமைச்சர் பேசியது "அவமானம்" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) செனட்டர் ஷெர்ரி ரெஹ்மான், "கந்தாபூரின் கருத்துக்கள் அவமானகரமானவை. தேர்தல்களின் போது அவர் இவ்வாறு கூறி இருப்பது தேர்தலின் நடத்தை விதிகளை மீறுவதாகும்" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com